சமிபத்தில் நான் பார்த்து ரசித்த தரமான படங்களில் ஒன்று "ஆயிரத்தில் ஒருவன்". Science & technology என்பதற்கு பதிலாக இந்த படத்தில் History & Technology. ஒரு உலக தரமிக்க படத்தை தமிழனாலும் எடுக்க முடியும் என்பதற்கு "செல்வராகவன்" ஒரு நல்ல உதாரணம். காட்சிக்கு காட்சி இயக்குனரின் கைவண்ணமும், செயல்வண்ணமும் கொழுந்து விட்டு எரிகிறது.
கி.பி.1279. சோழ நாட்டின் மிது பாண்டியர்கள் போர் தொடுக்கும் நேரும் அது. ஒட்டு மொத்த சோழ சாம்ராஜ்யமே அழியப்போகும் நிலையில், சோழ இளவரசனையும், எஞ்சி இருக்கும் மக்களையும் பத்திரமாக வேறு இடத்துக்கு அனுப்பி வைத்து மண்ணோடு அழிகிறது சோழ வம்சம். அவ்வாறு சொந்த நாட்டை விட்டே வெளியே செல்லும் மக்கள் கூட்டம் பாண்டிய மக்களின் குல தெய்வ சிலையையும் கொண்டு செல்ல "ஆயிரத்தில் ஒருவன்" கதை சூடு பிடிக்கிறது. அந்த சிலையையும், எஞ்சி இருக்கும் சோழ வம்சம் என்னவானது என்பதை அறியவும் ஆராய்ச்சியில் இறங்கிய ஒருவர் கூட உயிர் திரும்பாத நிலையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் (ரீமா சென், ஆண்ட்ரியா) மற்றும் சுமை தூக்கிகளின் தலைவன் கார்த்தி ஆகியோர் அக்களத்தில் குதிக்கிறார்கள். அவர்களின் பயணம் முதல் பாதியில் அற்புதமாக சித்தரித்து இருக்கிறார் இயக்குனர் செல்வா.
சரி, ஒரு வழியாக "ஏழு தடைகளை" கடந்து அச்சோழர் பூமியை இந்த மூவர்கள் அடைய, "இடைவேளை". நானும் பஜ்ஜி, காபி சாப்பிட்டு திரும்ப வந்து உட்கார்ந்தால் படத்தின் விறுவிறுப்பு இன்னும் அதிகமாக கூடுகிறது. உணர்வு ரீதியாக, மொழி ரீதியாக, வாழ்க்கைமுறை ரீதியாக, பண்பாடு ரீதியாக, கலாச்சார ரீதியாக, முதல் பாதிக்கும், அடுத்த பாதிக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள். சபாஷ் செல்வா! சோழ ராஜாவாக வரும் பார்த்திபன் தனது நடிப்பால் அனைவரையும் மிரட்டி இருக்கிறார் என்பதே உண்மை. சிலையை தேடி மட்டும் தான் ரீமா சென் வந்தாரா..அல்லது அவருக்கு வேறேதும் குறிக்கோள் இருகிறதா என்பதை "காசு கொடுத்து" வெண்திரையில் கண்டுகளியுங்கள்.
இப்படத்தின் சிறப்பம்சங்கள்: கார்த்தி, ரீமா, பார்த்திபன். அற்புதமான திரைக்கதை, ஆழ்ந்த செயலாக்கம், பலமான பின்னணி இசை, அழகான ஒளிப்பதிவு, சிறந்த கலை என்று சொல்லி கொண்டே போகலாம். ஆனால், என்னை மிகவும் கவர்ந்தது பின்பாதியில் வரும் "உரைத்தமிழ்". ஆஹா, என்ன ஒரு இனிமை, அந்த சோழ மக்கள் தமிழ் பேசும் தன்மை. இதை பார்க்கும் போது சோழர் காலத்தில் நான் வாழவில்லையே என்ற ஏக்கம் வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. தூய தமிழில் வசனம் எழுதிய செல்வா மற்றும் வைரமுத்துவிற்கு ஒரு தனி சபாஷ்!
இப்படத்தின் பலஹினம்: தஞ்சை, காஞ்சி, செய்யாறு (நான் வளர்ந்த மண்), மற்றும் பல இடங்களில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மிகுந்த தொழிர்நுட்ப்பத்துடன் சிவாபெருமான் கோயிலை கட்டிய சோழர்களா காட்டு வாசிகள் போல் வாழ்வது? மனித மாமிசத்தை உண்பது? அந்த அளவுக்கா அவர்கள் வாழ்கை தரம் குறைந்து விட்டது? இதற்கு செல்வா தான் பதில் சொல்ல வேண்டும்.
பல ஆங்கில படத்தின் தழுவல்கள் ஆங்காங்கே எட்டி பார்க்கிறது. உதாரணத்திற்கு, "cannibal holocaust ", Lord of the rings, Gladiator, மற்றும் operation condor. ஆனால், தழுவல்கள் இல்லமால் தற்போது எந்த படத்தையும் எடுக்க முடியாது என்பதை உணர்ந்தவர்கள் இதை பெரிய குறையாக கருத மாட்டார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் யார்: என்னை பொறுத்த வரை "கார்த்தி" தான் ஆயிரத்தில் ஒருவன். குறைந்தது ஆயிரம் பேர்களாவது சோழ மன்னனை தேடி முயற்சி செய்திருக்கிறார்கள். அதில் மூவர் மட்டுமே வெற்றி கண்டுள்ளனர். அம்முவர்களில், கார்த்தியை மட்டுமே சோழ சாம்ராஜ்ய மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். அவ்வாறு ஏற்று கொண்ட மக்களுக்கு கார்த்தி செய்யும் கைமாறு இப்படத்தின் இறுதியில் புலனாகிறது.
தொடரும்...
(இப்படத்தின் சிறப்பம்சங்கள் தொகுப்பை மற்றொரு கட்டுரையில் விரிவாக எழுத உள்ளேன். காத்திருக்கவும்)
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சம காலத்தில் தமிழுக்கு சோழர்களை பழக்கப் படுத்தியதில் பொன்னியின் செல்வன் மிக முக்கியமான ஒன்றாகும். ஆ.ஒ இன்னும் பார்க்க வில்லை. இந்த பதிவை வசிக்கும் பொழுது, பொ.செ ல் வரும் வந்திய தேவனை நினைக்காமல் இருக்க முடிய வில்லை. ஆ. ஒ பார்த்த பின் மீண்டும் விவாதிப்போம்.
இது மிக நல்ல பதிவு, சந்தேகம் இல்லாமல்.
Post a Comment