Tuesday, January 5, 2010

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு ...

ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு நல்ல குத்து பாட்டு கேட்டேன் ...செம சூப்பர் மச்சி. இந்த பாடலை கேட்க்க தூண்டிய அன்பரசுக்கு மிகவும் நன்றி. ஹி ஹி :) இதோ அந்த பாடல்.
---

இசை: விஜய் அந்தோணி
பாடல்: கபிலன்

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு


ஏய் பாதை வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்

ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கண்ணம்
கண்ணம் இல்ல கண்ணம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்

மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்

மாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை


கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு


கண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜீன்னு

பத்த வெச்ச மத்தாப்பு போல மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு

சுறுக்கு பைய போல இருக்கு இடுப்பு
இடுப்புல இடுப்பு இல்ல எந்திர மடிப்பு

கண்ணு பட போகுதுன்னு கண்ணத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்


கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

---

No comments: